அம்பாறையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஷாஹிர் ஹான் பாரூக் எனும் சுதந்திர ஊடகவியலாளருக்கு அக்கரைப்பற்று பொலிஸாரால் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
தனது பிரத்தியோக வேலை ஒன்றுக்காக அக்கரைப்பற்று பிரதான வீதியில் இருக்கின்ற முஸ்லிம் மையவாடிக்கு முன்னால் நேற்று (18) தான் மோட்டார் சைக்கிளில் இரவு 8.35 மணியளவில் பயணம் செய்த போது காரின் அருகில் நின்றிருந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கட்டளையிட்டு கை சைகை ஊடாக கேட்டுக் கொண்டார்.
உடனே நான் மோட்டார் சைக்கிளை அந்த இடத்தில் நிறுத்தினேன். அதன் பின்னரே அவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி என்பதையும் அவர் சிவிலுடையில் வந்துள்ளதையும் அவதானித்தேன்.