இலங்கையின் தெற்கு வங்காள விரிகுடா பகுதியில் காணப்படும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணித்தியாலங்களில் அருகிலுள்ள கடற்பரப்புகளை விட்டு விலகி கிழக்குத் திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.