வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி புல்லாவெளி செபஸ்தியர் தேவாலய கூரை இடிந்து வீழ்ந்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று காலை 5:30 மணியளவில் இந்தசம்பவம் இடம் பெற்றுள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த இளம் குடும்பம் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவதற்க்காக சென்று அங்கு தங்கியிருந்து வழிபாட்டில் ஈடுபட்ட வேளையிலேயே இவ் அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இதன்போது, கட்டைக்காட்டை சேர்ந்த இளைஞன் வினோத் என்பவர் படுகாயமடைந்துள்ள நிலையில் கிளிநொச்சி பொது வைத்திய சாலைக்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளார்.
அவரது மனைவியும் அங்கிருந்த போதும், அவர் தெய்வாதீனமாக தப்பித்துக் கொண்டார்.
அவர்களது மோட்டார் சைக்கிளும் பலத்த சேதம் அடைந்துள்ளது. ஆலய முகப்பு இடிந்து விழுந்ததிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.