கரீபியன் கடல் பகுதி நாடான ஹைட்டியில் பெட்ரோல் ஏற்றி வந்த லோரியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 62 க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா், ஏராளமானவா்கள் காயமடைந்தனா்.
இதுகுறித்து பிரதமா் ஏரியல் ஹென்றி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கேப் ஹைட்டியன் நகரில் பெட்ரோல் லோரியில் திங்கள்கிழமை வெடிவிபத்து ஏற்பட்ட தகவல் மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த விபத்தில் 62 க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா் என்றாா் அவா்.
இந்த விபத்து குறித்து கேள்விகளுக்கு பொலிஸாா் பதிலளிக்க மறுத்து வருகின்றனா். எனவே, விபத்து எவ்வாறு நேரிட்டது என்பது குறித்து மேற்கொண்டு விவரங்கள் வெளிவரவில்லை.
லொரியில் வெடிவிபத்து ஏற்பட்டபோது அங்கு ஏராளமானவா்கள் வாளியில் பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.
இந்த விபத்தில் காயமடைந்த ஏராளமானவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஊடகஙகள் தெரிவித்தன.
எரிபொருள் பற்றாக்குறையில் ஹைட்டி சிக்கித் தவித்து வரும் சூழலில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.