படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பிரஜையான பிரியந்த குமாரவின் குடும்பத்திற்காக சியல்கோட் வர்த்தக சமூகம் 100,000 அமெரிக்க டொலர் நிதியை திரட்டியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.
மறைந்த இலங்கை பிரஜை பிரியந்த குமாரவின் நினைவாக பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இரங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட போது பிரதமர் இம்ரான் கான் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதமர் இம்ரான் கான் தனது உரையில்,
படுகொலை செய்யப்பட்ட இலங்கை பிரஜை பிரியந்த குமாரவின் குடும்பத்திற்காக சியல்கோட்டின் வர்த்தக சமூகம் 100,000 அமெரிக்க டொலர் நிதி திரட்டியுள்ளது. பிரியந்தவின் சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் அவரது குடும்பத்திற்கு வழங்குவதற்கும் சியல்கோட்டின் வர்த்தக சமூகம் முடிவு செய்துள்ளது. பிரியந்த குமாரவை காப்பாற்ற முயற்சித்த மலிக் அட்னானின் (Malik Adnan )வீரம் மற்றும் துணிச்சல் குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.
மேலும், யார் மதத்தைப் பயன்படுத்தி அநீதி இழைத்தாலும், அவர்களை விட்டுவிடாதீர்கள் என்று பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டை முன்வைத்து தானே நீதிபதி ஆனதில் நியாயம் இல்லை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் போன்று தான் உயிரோடு உள்ளவரை இனி பாகிஸ்தானில் இடம்பெறாது என பிரதமர் இம்ரான் கான் இதன்போது தெரிவித்துள்ளார்.