கிளிநொச்சி வட்டக்கச்சி 5ம் வீட்டுத் திட்டம் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.தனது 2, 5 மற்றும் 8 வயதுடைய பிள்ளைகளுடனேயே குறித்த தாய் கிணற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டு வயதுப் பிள்ளையின் சடலத்தை மாத்திரம் மீட்டுள்ளதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் மற்றைய பிள்ளைகள் இருவரையும் தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.