அம்பாறை திருக்கோவில் பிரதேச சபைக்கு உட்பட்ட ஸ்ரீ வள்ளிபுரம் எனும் இடத்தில் உதவும் இதயங்கள் அமைப்பின் ஊடாக இன்று (2021.11.25) ஏற்பாடு செய்யப்பட்ட மரக்கன்று மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வானது இலங்கை இராணுவத்தினரால் இடை நிறுத்தப் பட்டது.
இதனால் அக் கிராமத்தில் ராணுவத்தினருக்கும் உதவும் இதயங்கள் அமைப்பினருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்வு தற்காலியமாக நிறுத்தப் பட்டது.
எனவே இந் நிகழ்வானது மாவீரர் நாளுக்கு பிறகு மீண்டும் வழங்கப்படும் என உதவும் இதயங்கள் அமைப்பானது தெரிவித்துள்ளது.