கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் 6 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு காணாமல் போனவர்களுள் 4 மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த படகில் பயணித்த மேலும் 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு இன்று (23) காலை விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேடுதல் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.