ஊடங்கு தொடர்பான ஜனாதிபதியின் அறிவிப்புக்கு முன்னர் எலிசே மாளிகையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது இந்த சந்திப்பு நாளை புதன்கிழமை அல்லது நாளை மறுநாள் வியாழக்கிழமை இடம்பெறும் எனவும் அதன் பின்னரே ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது பிரதமர் Jean Castex மற்றும் சில அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள் என அறிய முடிகிறது ஊரடங்கு நீட்டிப்பது தளர்த்துவது சுகாதார கடவுச் சீட்டுக்கு பதிலாக pass sanitaire பயன்படுத்துவது வணிக நிலையங்கள் திறக்கப்படுவது போன்ற முக்கிய முடிவுகள் இந்த சந்திப்பின் போது கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது.