யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை பூரண நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த மனு இன்று (12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
சட்டமா அதிபர் சார்ப்பில் ஆஜராக மேலதிக செலிஸிட்டர் ஜெனரல் பர்ஷான ஜமீலினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.