முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உட்பட 5 பேரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடுவலை நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கட்டுப்பாடற்ற விதத்தில் செயற்பட்டமைக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.