கொவிட் தடுப்பூசியேற்றல் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை எய்தியிருக்கும் முன்னேற்றங்களுக்கு அமெரிக்கா பாராட்டுத் தெரிவித்துள்ளது.
தனது சேவைக் காலத்தினை பூர்த்தி செய்து நாடு திரும்ப உள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி டெப்லிஸ்ட் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். இதன் போதே அவர் இலங்கைக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புகளை அதிகரிப்பதற்கு அலெய்னா வழங்கிய ஒத்துழைப்புகளை ஜனாதிபதி இதன் போது பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.
adstudio.cloud