என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வுப் பெறுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (15) ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் விநியோகத்தின் ஊடாக பந்துல குணவர்தன இலஞ்சம் பெற்றுக்கொண்டதாக நுகர்வோர் உரிமைகளை பாதுக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே (Ranjith Vithanage) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (15) அமைச்சர் பந்துல இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளரிடம் ரஞ்சித் விதானகே முன்வைத்த முறைப்பாட்டை துரிதமாக விசாரணைக்கு எடுக்குமாறு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
முகக்கவத்தின் ஊடாக இந்நிதியத்திற்கு ஒரு சதம் கூட நிதியுதவி கிடைக்கப் பெறவில்லை. இவ்வாறு இருக்கையில் இதுதொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிதியத்திற்கு உதவி செய்பவர்களையும், நிதியத்தில் இருந்து புலமை பரிசில் பெறும் மாணவர்களையும் அவமதித்துள்ளது.
ஆகவே முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நிறைவேற்று பணிப்பாளரிடம் கோரியுள்ளார்.