இலங்கை பசுமை அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபி (Denis Chaibi) தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு அளவில் GSP-வரிச்சலுகை வழங்கல் செயற்திட்டத்தின்போது பாரிஸ் உடன்படிக்கை உட்பட குழல்நேய செயற்பாடுகள் உள்வாங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இன்று செவ்வாய்கிழமை மாலை 4.30 மணியளவில் பசுமை அபிவிருத்தி தொடர்பான கொழும்பு அபிவிருத்தி கலந்துரையாடல் என்ற தலைப்பிலான மாநாடு ஆரம்பமானது. இதன்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டின் தொடக்கநாளான நேற்று (11) திங்கட்கிழமை சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, (Mahinda Amaraweera) ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபி, (Denis Chaibi) வதிவிடப்பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, (Asanka Shehan Semasinghe) ஐக்கிய நாடுகள் சபைக்கான உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, சமுர்த்தி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க (Anil Jasinghe) மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ரொபர்ட் ஜஹ்காம் ஆகியோரின் விசேட உரைகள் ஆற்றினார்.
இன்று மாலை (13) செவ்வாய்கிழமை இடம்பெற்ற மாநாட்டில் கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, (Asanka Shehan Semasinghe) அண்மைய காலங்களில் காலநிலை மாற்றத்தினால் இலங்கையும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்டதுடன் இதிலிருந்தும் கொரோனா தொற்று பரவல் சவாலில் இருந்தும் நாட்டுமக்களைப் பாதுகாப்பதற்கான நீண்டகால செயற்திட்டங்களைத் தயாரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாகவும் தெரிவித்தார்.