கனேடிய அரசாங்கத்தினால் இலங்கை தமிழ் மக்களுக்கான உதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எ. டேவிட் மெக்கினன் தெரிவித்தார்
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எ. டேவிட் மெக்கினன் தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று (12) யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
மேலும் தமிழ் மக்கள் முன்வைக்கின்ற அடிப்படை தேவையான கோரிக்கை தொடர்பில் முழுமையான ஆதரவு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான நிலைமைக்கு ஏற்பட்டதற்காக இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என இதன்போது கருத்து தெரிவித்த யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.
இதன் போது யாழ் மாநகர ஆணையாளர் இ.ஜெயசீலன் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

