நாட்டில் 18 மற்றும் 19 வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தடுப்பூசி தொடர்பான தொழில்நுட்ப குழு தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 11ஆம் திகதி முதல் குறிப்பிட்ட வயதினருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
அதன்படி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் 18 மற்றும் 19 வயதுடைய அனைவருக்கும் தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Previous Article42000ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
Next Article இன்றைய ராசிபலன் – 8/10/2021