ஜப்பான் கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் இரண்டு இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Murasame மற்றும் Kaga ஆகிய இரண்டு போர்க்ககப்பல்களே இவ்வாறு இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுபிக் வலயத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் இரு தரப்பு பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அடுத்து குறித்த கப்பல்கள் இலங்கைக்கு வருகைதரவுள்ளன.
இந்த நிலையில் Murasame மற்றும் Kaga ஆகிய இரண்டு போர் கப்பல்கள் இலங்கைக்கு வருகைன்றமை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக அமையும் என என ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது