லொஹான் ரத்வத்த விவகாரம் தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகளுக்காக உச்சநீதிமன்றில் இன்று அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மேற்கொண்ட அராஜக செயற்பாடுகளுக்கு எதிராக ,தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் இன்று சட்டத்தரணி மொஹான் பாலேந்திரா ஊடாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் , சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் மனுதாரர்கள் சார்பில் ஆஜராகவுள்ளனர்.