ரெலோ அமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தம் கருணாகரன் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் சில காலம் ரெலோ அமைப்பில் இணைந்திருந்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்தவால் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டு கூட்டமைப்பில் இணைந்த மட்டக்களப்பு எம்.பி சாணக்கியன் ராஜபுத்திரன் அண்மையில் விளக்கமின்றி ஒரு கருத்தை தெரிவித்திருந்ததாக ரெலோ அமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தம் கருணாகரன் கூறினார்.
தமிழ் தரப்புக்கள் ஒன்றாக இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியதால் எம்.ஏ.சுமந்திரன் அணி கொதிப்படைந்திருந்தது. அந்த அணியின் சாணக்கியன், “ரெலோவினர் தாங்களும் ஒரு கட்சியை வைத்திருக்கிறோம் என காட்ட கடிதம் அனுப்பினார்கள்“ என்ற சாரப்பட, கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் ரெலோ பொதுச்செயலாளர் கோவிந்தன் கருணாகரம் சாணக்கியனின் இந்த விடலைத்தனமாக கருத்திற்கு பதிலளித்துள்ளார். சாணக்கியனை மறைமுகமாக “தமிழ் தேசிய குழந்தைகள்“ என சுட்டிக்காட்டி, வரலாறு தெரியாமல் தமிழ் அரசு கட்சியின் சில எம்.பிக்கள் பேசுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.