காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை, மேலும் 12 மாதங்களுக்கு நீடித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 30 ஆம் திகதி வரையிலான காலப் பகுதிக்குள் காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப் பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் அவை காலாவதியான திகதியில் இருந்து மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி எதிர்வரும் 2021 ஒக்டோபர் 1 ஆம் திகதியில் இருந்து 2022 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான காலப் பகுதிக்குள் காலாவதியாகவுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.