எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நாடு சில கட்டுப்பாடுகளுடன் முழுமையாக திறக்கப்படவுள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் அடுத்த மாதம் அமைச்சரவையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தேசித்திருப்பதாக தகவல்வெளியாகியுள்ளது. அதன்படி முழுமையான அமைச்சரவை மாற்றமாக இது அமையும் என்றும் கூறப்படுகின்றது.
பெரும்பாலும் வரவு செலவுத்திட்டத்திற்குப் பின்னராக அமைச்சரவை மாற்றம் நிகழ்வது வழக்கம். எனினும் இம்முறை அதற்கு முன்னதாகவே அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்படவிருப்பதாக தெரியவருகிறது.
இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கு முன்னர் அந்த மாற்றத்திற்கு விருப்பம் வெளியிடவில்லை என்றாலும் தற்போது அவர் விருப்பம் வெளியிட்டிருப்பதாகவே அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.