ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க வருகையை முன்னிட்டு அங்கு இன்று இரண்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
புலம்பெயர் தமிழ் மக்களால் போர்க்குற்றம் மற்றும் காணாமல் போனோருக்கு நீதி கோரி #GoBackGota என்ற பெயரில் ஆர்ப்பாட்டமொன்று முற்பகல் 11.00 மணிக்கு ஐ.நா தலைமையக முன்றலில் நடத்தப்படவுள்ளது.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மற்றுமொரு ஆர்ப்பாட்டமும் நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் 9.30 அளவில் மன்ஹட்டனில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.