வெளிநாடு செல்வோருக்கு வசதியாக ஒன்லைன் முறை மூலம் ஸ்மார்ட் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, covid-19.health.gov.lk/certificate எனும் இணையத்தள இணைப்பின் ஊடாக சென்று, தங்களது விபரங்களை வழங்கி, குறித்த சான்றிதழை பெற முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA இனால் குறித்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த தளத்தில் விண்ணப்பதாரி தனது பெயர், முகவரி, கடவுச்சீட்டு இலக்கம், வெளிநாடு செல்லும் திகதி உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும்.