ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதால், அரசாங்கத்திற்கு தினமும் சுமார் 15 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
எனவே நாடு முடக்கப்படுவதை தொடர்ந்தும் நீடிக்காது, முடிந்தவரை குறுகிய காலத்தில் திறக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது, நாட்டின் வளர்ச்சி வீதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பன பாதிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, நாட்டை முடக்குவதால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்க வேண்டுமாயின், நாம் நாட்டை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
15 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
No Comments1 Min Read

