இலங்கையில் கடந்த 24 மணித்தியாளங்களில் கோவிட்-19 தொற்றுடன் தொடர்புடைய மேலும் 171 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, இன்று செவ்வாய்க்கிழமை சுகாதார சேவைகள் இயக்குநரால் உறுதிப்படுத்தப்பட்டு அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,434 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை உயிரிழந்தவர்களில் 69 பெண்களும் , 102 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.