12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு, கட்டம் கட்டமாக கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள தென் மாகாண கொரோனா சிறுவர் சிகிச்சை பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் தங்காலை கால்ட்ன் இல்லத்திலிருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக இணைந்து கொண்டபோது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பிலும், பல்வேறு பிரச்சினைகள் உள்ள சிறுவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.