ஆன்லைனில் பாடம் படிக்காததால் 4 வயது மகனை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் இடம்பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பாத்தார்டி பாட்டா பகுதியில் உள்ள சாய் சித்தி அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்த நிலையில் 4 வயதான ரிதான். மழலையர் பாடசாலையில் சேர்க்கப்பட்டிருந்தான்.
இந்நிலையில், சிறுவன் ரிதான் ஆன்லைன் பாடத்தை கவனிக்காமல் விளையாட்டு தனமாக இருந்துள்ளான். இதனால் ஆத்திரம் அடைந்த, சிறுவனின் தாய் சிக்கா (வயது-23) அங்கிருந்த தலையணையால் சிறுவன் ரிதானின் முகத்தில் வைத்து அமுக்கியுள்ளார்.
இதையடுத்து சிறுவன் மூக்கில் இருந்து இரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்துள்ளான் இதைக் கண்டு, அதிர்ச்சி அடைந்த சிக்கா தனது உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்துள்ளார் என நம்பப்படுகின்றது.
இதையடுத்தே அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலம் மீடகப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு மரணங்களுக்கும் தானே பொறுப்பு என சிக்கா தற்கொலை குறிப்பில் எழுதிவைத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது