இந்திய திரைப்பட நடிகை நமீதா மற்றும் அவரது கணவர், திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான வீரேந்திர சவுத்திரி ஆகியோர் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்திற்கு நேற்று (04) விஜயம் செய்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெ. விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது வடக்கு மாகாணத்தின் தற்போதைய சுற்றுலாத்துறை நிலைமைகள் தொடர்பிலும், நடிகை நமீதா மற்றும் வீரேந்திர சவுத்திரி குழுவினரால் வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை நடிகை நமீதா உள்ளிட்ட குழுவினர் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

