இலங்கையில் சமூக ஊடகங்களில் டிக்டொக் முற்றாக தடைச்செய்யப்படவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் , 16 வயது வரை மட்டுமன்றி 20 வயது வரைக்கு சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும் எனவும் அர்ச்சுனா MP வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அர்ச்சுனா MP மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.

