நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு
இன்று காலை 9 மணிக்கு ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்சவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்கு மூலம் வழங்குவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில், இன்று முற்பகல் அவர் முன்னிலையாகி இருந்தார்.
இந்தநிலையில், சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்த அதிகாரிகள் நாமல் ராஜபக்ஷவை கைது செய்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு, வானூர்திகளை கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே, அவர் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

