அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரக் தடைகளை விதிக்க வேண்டாம் என வளைகுடா நாடுகளுக்கு ஈரானின் பாதுகாப்புத் தலைவர் ரெசாய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மீறிச் செயல்பட்டால் அவர்களின் நலன்களை இலக்கு வைத்து ஈரான் பதிலடி கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஈரானைச் சுற்றியுள்ள நாடுகள் அமெரிக்காவின் இந்தப் பொருளாதாரப் போரில் இணைந்தால், பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேறாது, அத்துடன் பாரசீக வளைகுடாவின் பிற எண்ணெய் ஏற்றுமதி பாதைகளையும் நாங்கள் இலக்கு வைப்போம்” என்று அவர் எச்சரித்துள்ளார்
அமெரிக்காவை தூண்டிய நெதன்யாகு
மேலும், ஈரானுக்கு எதிராகப் பொருளாதாரப் போரைத் தொடங்குமாறு அமெரிக்காவை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவே தூண்டிவிட்டதாகவும் ரெசாய் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்திட்டம் குறித்து ட்ரம்ப் ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய போதிலும், இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை இதனைச் சோதித்துப் பார்த்து, பின்னர் அடுத்த ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதா என்பதை முடிவு செய்யலாம் என இஸ்ரேலிய பிரதமர் அவரைச் சம்மதிக்க வைத்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

