22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று மனுக்களின் பிரதிகள் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இந்த அறிவிப்பை விடுத்தார்.
அத்துடன், நீதித்துறை அமைப்புகள் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்திற்கு கிடைத்துள்ள மனுக்களின் பிரதிகளும் தமக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

