இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (12) முற்பகல் 4.00 மணி முதல் நாளை (13) முற்பகல் 4.00 மணி வரையான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
முதலாம் கட்ட’ எச்சரிக்கை
அதன்படி, அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படும் மஞ்சள் நிறத்திலான ‘முதலாம் கட்ட’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்:
களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவர
கண்டி மாவட்டம்: தொழுவ
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ
இரத்தினபுரி மாவட்டம்: பெல்மதுடுல்ல, அயகம, இரத்தினபுரி, கொடகவெல, கலவான மற்றும் நிவித்திகல

