🎉 SpicyBayer – Bavarian & Indian Kitchen திறப்பு விழாவில் மனிதநேயத்தின் மகத்தான தருணம் 🎉
23.05.2025 அன்று நடைபெற்ற
SpicyBayer – Bavarian & Indian Kitchen திறப்பு விழா
அங்கு கலந்து கொண்ட அனைவரின் மனதையும் கவர்ந்த ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
பாரம்பரிய பவேரிய உணவுகளும்,
சுவைமிக்க தமிழ் – இந்திய சமையலும் இணைந்த
இந்த சிறப்பு நிகழ்வில்,
எதிர்பாராத விதமாக தாயக மக்களுக்கு உதவியாக 25,000.00 யூரோ நிதியுதவி
வழங்கப்பட்டது.
இந்த நிதியினை,
ஜெர்மனியில் சிறுவயதிலிருந்து வளர்ந்து தற்போது வெற்றிகரமான தொழிலதிபர்களாக திகழும்
சகோதரர்கள் தங்களின் பிள்ளைகளின் கைகளால்
உதவும் இதயங்கள் நிறுவனம் – ஜெர்மனி
இயக்குனர் திரு. ம. சிறீரஞ்சன் அவர்களிடம் வழங்கினர்.
இந்த தருணம் அங்கு கலந்து கொண்ட
400 பேருக்கு மேற்பட்டவர்களை
ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
தாயக மக்கள்மீது கொண்டுள்ள
அவர்களின் அக்கறையும் மனிதநேயமும்
அனைவரையும் சிந்திக்க வைத்தது.
புலம்பெயர் தேசங்களில் வாழும் பலரும்
இவ்வாறு முன்வந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதற்கான
மிகச்சிறந்த முன்னுதாரணமாக இவர்கள் திகழ்கின்றார்கள்.
இளைய தலைமுறையினரை ஊக்குவித்தால்,
அவர்கள் தாயக உறவுகளுக்கு
இரு கரம் கொண்டு உதவுவார்கள் என்பதில்
எந்த சந்தேகமும் இல்லை என்பதை
இந்த நிகழ்வு மீண்டும் உணர்த்தியது.
இந்த நிதியினை வழங்கிய குழந்தைகளின் பெயர்களே
அவர்களின் தாயக உணர்வை வெளிப்படுத்துகின்றன:
💚 சந்யா
💚 அகரன்
💚 கவின்
💚 அறன்
💚 வியன்
💚 நேயா
💚 இயல்
உண்மையிலேயே சிறந்த பெற்றோர்கள் என்ற பெருமைக்கு உரியவர்கள்.
இந்த உயர்ந்த மனிதநேய செயலில் பங்கெடுத்த
💐 திரு & திருமதி தீபன்
💐 திரு & திருமதி வர்ணன்
💐 திரு & திருமதி விபுலான்
அவர்களுக்கும்,
அன்புக் குழந்தைகளுக்கும்
எமது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
🙏
உதவும் இதயங்கள் நிறுவனம் – ஜெர்மனி
HELPING HEARTS e.V – GERMANY





