பெங்களூரு கெம்பே கவுடா விமான நிலையத்தில் வைத்து 10 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டு சுங்க அதிகாரிகளினால் குறித்த 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்கத்தை தங்களது உடலில் மறைத்து வைத்து கடத்த முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் 8 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.