அமெரிக்காவில் உயிரணு தானம் செய்யும் ஒருவர், தனக்கு 78 குழந்தைகள் இருப்பதாகவும், தற்போது 13 பெண்கள் தன் குழந்தையை சுமப்பதாகவும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்.
நியூயார்க்கில் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றும் Ari Nagel (44)தான் அந்த ’வள்ளல்’. நான் யாரிடமும் ஒரு டொலர் கூட என் சேவைக்காக வாங்கியதில்லை, அவர்களுடைய குடும்பம் பெரிதாக நான் உதவுகிறேன், அவ்வளவுதான் என்கிறார் Nagel.
எனக்கு இத்தனை பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம் என்று கூறும் Nagel, சில பிள்ளைகளை நான் தினமும் பார்க்கிறேன், சிலரை நான் இதுவரை சந்தித்ததேயில்லை என்கிறார்.
சரி, உயிரணு தானத்துக்காக நீங்கள் எந்த கட்டணமுமே வாங்குவதில்லையா, என அழுத்திக்கேட்டால், வாங்குகிறேனே, சில முத்தங்களும் அணைப்புகளும்தான் எனக்கு கட்டணம் என்கிறார் Nagel சிரித்தபடியே.