நாட்டில் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் 60 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசியினை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தினை விரைவு படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அதன்படி, அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி மத்திய நிலையம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,அடுத்த திங்கட்கிழமை முதல் ஒவ்வொரு பிரதான வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி மையத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும் இது தினசரி மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் எனவும் அவர் கூறினார்.
இதற்காக அடையாள அட்டை மட்டுமே தேவைப்படுகிறது என்றும், நாம் விண்ணப்ப படிவம் ஒன்றை வௌியிட்டுள்ளோம். குறித்த விண்ணப்ப படிவத்தை வீட்டிலேயே நிரப்பி வந்தால் தடுப்பூசியை மிக விரைவாக பெற்றுக்கொடுக்க முடியும் என்றார்.