தற்போது இனைஞர்களை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா லட்சுமி. சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற படங்களில் அவரது படிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பொன்னியின் செல்வனின் ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா சமீபத்திய பேட்டியில் தனது இளம் வயது காதல் பற்றி பேசி இருக்கிறார்.
தான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை ஒருதலையாக மனதிற்குள்ளேயே காதலித்ததாக கூறி இருக்கிறார். ஆனால் தற்போது கிரிக்கெட் பார்க்க கூட நேரமில்லை எனவும் தெரிவித்து இருக்கிறார்.