சீனாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன.
சீனாவிலிருந்து 5 இலட்சம் சைனோபாம் தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
சீனாவின் பீஜிங்கில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்றிரவு தடுப்பூசிகளை ஏற்றிய விமானம் வந்தடைந்துள்ளது.
குறித்த 5 இலட்சம் தடுப்பூசிகளும் இலங்கைக்கான சீன தூதரால் உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சைனோபாம் தடுப்பூசிகளை இன்று முதல் மக்களுக்கு செலுத்தும் நடவடிக்கை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.