முன்னணி கட்சிகள் நிறைய சம்பாதித்து வைத்துள்ள நிலையில் அவர்களிடம் 5 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்தால் தான் ஓட்டு போடுவேன் என சொல்லுங்கள் என சீமான் கர்ஜனையுடன் பேசியுள்ளார்.
ஓசூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கீதா லட்சுமிக்கு ஆதரவாக சீமான் நேற்று வாக்கு சேகரித்தார்.அவர் பேசுகையில், அறிஞர் அண்ணா, தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பார்களா என்று கேட்டார். அவர் பெயரைச் சொல்லிப் பல ஆண்டுகளாக அரசியல் செய்கிற இவர்கள் தான் (திமுக, அதிமுகவை குறிப்பிடுகிறார்) தங்கத்தைத் தவிட்டுக்கு வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
இம்முறையும் காசு கொடுப்பார்கள். ஆனால் என் மக்களிடம் வேண்டுவது ஒன்றுதான், நிறைய சம்பாதித்து வைத்திருக்கிறார்கள்.
ஆயிரம், ஐநூறு வேண்டாம். 5 ஆயிரம், 10 ஆயிரம் கேளுங்கள். அப்போது தான் ஓட்டு போடுவேன் என்று சொல்லுங்கள் என கூறியுள்ளார்.