ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது 45 வருடகால நாடாளுமன்ற அரசியல் பயணத்தில் நிதி அமைச்சராக, ஒரு ஆண்டுக்குரிய முதலாவது வரவு – செலவுத் திட்டத்தை இன்று முனைக்கின்றார்.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிவகித்தபோது, இலங்கையின் 24 ஆவது நிதி அமைச்சராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, இடைக்கால பாதீட்டை முன்வைத்திருந்தார்.
அரசியல் பயணம்
எனினும், அவர் முழு ஆண்டுக்குரிய பாதீட்டை முன்வைப்பது இதுவே முதன் முறையாகும். ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற அரசியல் பயணம் 1977 ஆம் ஆண்டில் ஆரம்பமானது.
பிரதி அமைச்சர், அமைச்சர், பிரதமர் என பதவிகளை வகித்திருந்தாலும், சுமார் 44 ஆண்டுகளுக்கு பிறகே அவருக்கு நிதி அமைச்சு பதவி கிட்டியது. அதேவேளை இலங்கையின் முதலாவது நிதி அமைச்சர் ஜே.ஆர். ஜயவர்தன ஆவார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் நிதி அமைச்சு பதவியை வகித்தவர்களில் ரோனி த மேல் (ஐக்கிய தேசியக்கட்சி) என்பவரே 12 தடவைகள் வரவு – செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார்.
அவருக்கு அடுத்ததாக மஹிந்த ராஜபக்ச 11 தடவைகள் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.