இந்தியாவிலிருந்து படகு மூலமாக கடத்திவரப்பட்டதாக நம்பப்படுகின்ற 41 இலட்சம் ரூபா பெறுமதியான ஒதுதொகை கேரள கஞ்சா இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் – தொண்டமானாறு பிரதேச கடற்பகுதியில் வைத்து நேற்று இரவு படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 139 கிலோ 100 கிராம் எடைகொண்ட கேரள கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளன.அவற்றை இலங்கை கடற்படையினர் கரையில் வைத்து தீயிட்டு அழித்துள்ளனர். எனினும் இந்த சம்பவம் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதோடு கேரள கஞ்சா வைக்கப்பட்டிருந்த படகு கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.