இந்தியாவில் கணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், மனைவி மற்றும் 23 வயது வாலிபரை பொலிசார் கைது செய்தனர்.தெற்கு டெல்லி இராணுவ காலனி பகுதியில் தனியார் பஸ் டிரைவர் பீம்ராஜ்(45) என்பவர் காரில் அமர்ந்து இருந்த போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபரால் சுடப்பட்டார்,இதனால் கழுத்தில் குண்டு பாய்ந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் கமலாநகர் பகுதியை சேர்ந்த லகான் என்பது தெரியவந்தது.இதையடுத்து, அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, அவர் கோவிந்தபுரியை சேர்ந்த ரோகன் என்கிற மணிஷ் என்பவரின் இரு சக்கர வாகனத்தை வாங்கி சென்றது தெரியவந்தது.
சிசிடிவிகாட்சிகளிலும் இரு சக்கர வாகனத்தை பார்க் செய்து விட்டு ரோகன் ஹெல்மெட்டை கழற்றி விட்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து பொலிசார் ரோகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சாலையில் வாகனம் ஓட்டிய போது ஏற்பட்ட மோதலில் பீம்ராஜை கொலை செய்ய முயற்சி செய்தாக ரோகன் கூறினார்.
அதன்பின் அவரது செல்போன் அழைப்புகளை பொலிசார் பரிசோதித்த போது பீம்ராஜ் மனைவியான 41 வயது பபிதா அடிக்கடி போன் செய்து இருப்பது தெரிய வந்தது.இதுபற்றி விசாரித்த போது பபிதாவுக்கும், ரோகனுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக முறையற்ற பழக்கம் இருப்பது தெரியவந்தது.
இது வெளியே தெரிந்ததால் பீம்ராஜ் தனது மனைவி பபிதாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து ரோகன் உதவியுடன் பீம்ராஜை தீர்த்துக்கட்ட பபிதா திட்டமிட்டார்.அதன் அடிப்படையில் நாட்டுத்துப்பாக்கி வாங்கி பீம்ராஜ்மீது ரோகன் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து பபிதாவை பொலிசார் கைது செய்தனர்.