ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் “பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு” என்ற தலைப்பில் நேற்று விவாதம் நடைபெற்றது.
இதில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி சைமா சலீம், காஷ்மீரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பல தசாப்தங்களாக போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.
ஆனால் இதை மறுத்து பேசிய இந்தியாவுக்கான நிரந்தர ஐநா பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பாகிஸ்தான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
அவர் பேசியதாவது,
“ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டிற்கு எதிராக பொய்களைப் பரப்பும் பாகிஸ்தானிடமிருந்து தவறான அறிக்கைகளைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் போரில் ஆபரேஷன் சர்ச்லைட்டின் போது 400,000 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய உத்தரவிட்ட நாடு இதுதான்.
தனது சொந்த குடிமக்கள் மீது குண்டுவீசி திட்டமிட்ட இனப்படுகொலையைச் செய்யும் நாடு இது.
உலகம் அதன் இரட்டைத் தரத்தை உணர்ந்திருந்தாலும், இப்போது அது தன்னை ‘மனித உரிமைகளின் பாதுகாவலர்’ என்று சித்தரிக்க முயற்சிக்கிறது.
பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு விடயத்தில் இந்தியாவின் சாதனை எந்த விதத்திலும் குறைபாடற்ற முன்மாதிரியான ஒன்றாகும் என்று தெரிவித்தார்.