கட்டணம் செலுத்தல் முறைமையின் கீழ் இந்தியாவில் இருந்து 4 எரிபொருள் கப்பல்களை நாட்டுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, தலா 40, 000 டன் எரிபொருள் அடங்கிய 4 கப்பல்கள் நாட்டுக்கு வரும் என கூறப்படுகின்றது. .
புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தலைமையிலான தூதுக்குழுவினர் இந்திய பெற்றோலிய வளத்துறை அமைச்சருடன் சந்திப்பை நடத்தியிருந்தனர்.
அந்த சந்திப்பின் பயனாக, கட்டணம் செலுத்தல் அடிப்படையில் எரிபொருளை நாட்டுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.