நடிகர் சிம்பு திருமணம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடந்த 2002ம் ஆண்டில் வெளியான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.
பல சர்ச்சைகள், நெகட்டிவ் விமர்சனங்களுக்கு மத்தியில் தனது நடிப்பில் உச்சத்தில் இருக்கும் சிம்பு தற்போது தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
நயன்தாராவுடன் காதல் பிரேக்கப், ஹன்சிகாவுடன் பிரேக்கப் என்று அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய சிம்பு பின்பு இலங்கை பெண் ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாகவும், நிதி அகர்வாலுடன் காதல் என்று தகவல் வெளியானது.
தற்போது ஆந்திராவைச் சேர்ந்த மிகப்பெரிய தொழிலதிபரும், சினிமா பைனாஸியர் ஒருவரின் மகளை திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
40 வயதைக் கடந்த சிம்புவிற்கு திருமணம் என்று தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் குஷியில் ஆழ்ந்துள்ளனர்.