தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இதனை தெரிவித்தார்.
மேலும் நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்