06.06.2022
நிதி உதவி: அமரர் ஆறுமுகம் குணலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளில் அவர்களின் பிள்ளைகள்.
நெடுங்கேணி துவரங்குள கிராமத்தில் மாலைநேர கல்வி நிலையம் வைபக ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவில் துவரங்குள கிராம அபிவிருத்தி சங்கத்தின் வேண்டுகோளுக்கு இனங்க உதவும் இதயங்கள் நிறுவனத்தின் 160300,00 ரூபா நிதியுதவியுடன் தளபாட வசதிகளுடன் மாலை நேர கல்வி நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
அமரர் ஆறுமுகம் குணலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளில் துவரம்குளம் என்னும் எல்லைப்புறக்கிராமத்தில் உதவும் இதயங்களின் 4 வது மாலை நேரக்கல்விநிலையம் 05.06.2022 அன்று ஆறுமுகம் குணலிங்கம் அவர்களின் பிள்ளைகளாகிய (எமது அமைப்பின் செயலாளர் ,சரஸ் சேவை உரிமையாளர் திரு மணிமாறன்,அங்கத்தவர்கள் திரு நிசாந்தன் ,திருமதி சுதாமினி மற்றும் திருமதி சுமதி,திருமதி சுபாயினி, திரு கேதிஸ்வரன்) அவர்களின் நிதி பங்களிப்புடன் ஆரம்பித்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.அமரர் ஆறுமுகம் குணலிங்கம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.
மேலும் துவரம்குளம் நெடுங்கேணி கிராமத்தில் வாழும் மாணவர்களை ஊக்கிவித்து கல்வியே எமது சிறார்களின் மூலதனம் என்பதினை அவர்களுக்கு தெளிவு படுத்தி கற்பித்தலை ஊக்கிவிக்கும் நல்ல எண்ணத்துடன் உதவும் இதயங்கள் நிறுவனம் பிரதேச செயலகத்தின் அனுமதியுடன் ஆரம்பித்து வைக்கின்றோம்.
முதலாவதாக கோட்டைக்கட்டியகுளம் துணுக்காய் , இரண்டாவதாக ஜேம்ஸ்புரம் நாச்சிக்குடா பூநகரி மூன்றாவதாக சிறிவள்ளிபுரம் அம்பாறை நான்காவதாக இன்று துவரம்குளம் நெடுங்கேணி என்னும் கிராமத்தில் ஆரம்பிக்கின்றோம். எங்களுடைய கல்விப் பயணம் தொடரும்.
பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு இலவச மாலைநேரக் கல்வி நிலையத்தினை முகாமையாளர் ஆசிரியர் வளமை விருத்தி நிலையம் புளியங்குளம் க.ஜெயச்சந்திரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்நிகழ்விற்கு வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் த.பார்தீபன், பட்டிகுடியிருப்பு அ.த.க பாடசாலையின் அதிபர் பாஸ்கரன்,கிராம சேவையாளர் வி.தீபன், ஒலுமடு தமிழ் மகாவித்தியாலையா ஆசிரியர் ம.நந்தினி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த ஏற்பாட்டினை ஒழுங்கு செய்து தந்த திரு ந.கலைச்செல்வன்
எமது உறுப்பினர்களுக்கும்,ஊர் நலன் விரும்பிகளுக்கும் இந்த இடத்தினை தந்துதவிய பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளர் நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள்.எம்மை பொறுத்தவரை உண்மை நேர்மை ஒழுக்கத்துடன் பயணிக்கும் பட்சத்தில் உங்களுடன் தொடர்ந்து பயணிப்போம் என்பதனை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் ஆறுமுகம் குணலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளில் மாலைநேர கல்வி நிலையம்160300,00 ரூபா HelpingHearts News
Previous Articleபொலிவுட் நடிகர்களை சந்தித்த அமைச்சர் ஹரீன்!-Karihaalan news
Next Article இன்றைய ராசிபலன் -Karihaalan news