யாழ்/ எழுதுமட்டுவாழின் வடபகுதியான விளுவளையில் கதிர்காமு-அன்னபாக்கியம் தம்பதிகளுக்குத் தலைமகனாக 01.04.1964 அன்று சிவரூபநாதன் பூவுலகிற்கு வருகைதந்தார். இவர் அன்புடனும் பண்புடனும் அனைவரையும் மதித்து மரியாதை கொடுத்து மரியாதைபெறும் மகனாகவே சிறுவயதிலிருந்து இதுவரை வாழ்ந்து வந்தார். இவர் மிகச்சிறுவயதிற் தாயாரை இழந்ததால், தாயாரின் தங்கையான சிறியதாயாரின் அரவணைப்பிலேயே வாழ்ந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டு முதலில் லிபியாவின் விமானநிலையத்தில் வேலைபெற்று சில ஆண்டுகள் அங்கு வேலை செய்து வந்தார்.
பின்னர் மத்தியகிழக்கிற் போர்ச்சூழல் ஏற்பட்ட போது யேர்மன் வந்து அங்கிருந்து சுவிற்சலாந்து சென்று அங்கு அழகான நகரான சூரிச் மாநகரில் குடியேறி அங்கும் விமானநிலையத்திற்கு வருவோரை விடுதிக்கு அழைத்துச் செல்லும் பேருந்து ஓட்டுனராகவே பணிபுரிந்து வந்தார். 27.03.2021 அன்று தற்செயலாக தலைசுற்றி விழுந்ததால் தலையில் ஏற்பட்ட சிறுகாயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அன்று மாலைமுழுவதும் தனது சகோதர சசோதரிகளுடனும் மனைவியுடனும் கதைத்து விட்டுப் படுத்தவர் மறுநாட்காலையில் எழுந்திருக்கவேயில்லை.
சில நாட்கள் சுயநினைவின்றி மயக்கத்தில் இருந்து 05.03. 2021 இல் ஆண்டவன் அடி சேர்ந்தார்.