பொன்னியின் செல்வன் 2 கடந்த மாதம் 28ஆம் தேதி வெளிவந்தது. பெரும் எதிர்பார்ப்பு இப்படத்தின் மீது இருந்தாலும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை.
வெளிவந்து சில நாட்கள் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பிய பொன்னியின் செல்வன் 2 அடுத்தடுத்த நாட்களில் குறைய துவங்கியது.
4 நாட்களில் ரூ. 200 கோடியை கடந்தது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
அதை தொடர்ந்து தற்போது 10 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் ரூ. 300 கோடியை பொன்னியின் செல்வன் 2 கடந்துவிட்டது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.